உஷாரா இருங்க..! கொரோனா 5வது அலை ஏற்பட வாய்ப்பு! அதிபர் அதிர்ச்சித் தகவல்!
டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால், நாட்டில், கொரோனா ஐந்தாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பாக, ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவிய கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், பிரசில் உட்பட உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என உருமாற்றம் அடைந்து, தற்போது ஐந்தாம் அலை என பரவி வருகிறது.
உருமாற்றம் அடைந்த கொரோனா என அனைத்து வகை கொரோனா வைரஸ் தொற்றுகளை அழிக்கும் ஒரே பேராயுதம், தடுப்பூசி தான். இதை அடுத்து, இந்தியா, அமெரிக்கா, பிரசில், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment