அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. பரசுராமன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் நீக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. பரசுராமன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் நீக்கம்

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. பரசுராமன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் நீக்கம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் முன்னாள் எம்.பி. பரசுராமன் உள்ளிட்ட 5 பேர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு. பரசுராமன்,
கோ. ராஜமோகன், பண்டரிநாதன், ஆர்.எம். பாஸ்கர், கே. அருள்சகாயகுமார் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம்''. என இவ்வாறு கூறப்பட்டுள்ளது

அதிமுகவில் சசிகலா இடையூறு ஆரம்பித்ததில் இருந்தும், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தும் பல்வேறு காரணங்களுக்காக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும், சசிகலாவுடன் செல்போனில் பேசியவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களே அதிகம்.

No comments:

Post a Comment

Post Top Ad