9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்!

9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்களை கற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் வசதி இல்லாததால் பல மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் நிலவுகிறது. கல்விக் கட்டணம், பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு என பல மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். ஆன்லைன் மூலமாக கல்வி கற்பவர்களும் கடுமையான மனச் சோர்வுக்கு ஆளாவதாக மருத்துவ வல்லுநர்களே கூறுகின்றனர்.இந்த சூழலில் தமிழ்நாட்டில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 75 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலித்தால் அது தவறுதான்.



ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசாணைகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இந்த சிஸ்டத்தை சீர் செய்ய வேண்டும், பள்ளிக் கல்வித்துறையில் ஒரு ஆசிரியர் பணிக்கு வர இது தான் வழி என ஒரு முறையான வழியை உருவாக்க வேண்டும். இது குறித்து முதல்வரிடம் பேச உள்ளோம்.

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பொது முடக்கம் அறிவிக்கவும், தளர்வுகளை அறிவிக்கவும் முதல்வர் பல்வேறு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கிறார். பள்ளிகள் திறப்பு குறித்து இதைவிட அதிக ஆலோசனைகள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad