தமிழ்நாட்டில் கடைகள் அடைப்பு? காத்திருக்கும் மற்றொரு ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

தமிழ்நாட்டில் கடைகள் அடைப்பு? காத்திருக்கும் மற்றொரு ஷாக்!

தமிழ்நாட்டில் கடைகள் அடைப்பு? காத்திருக்கும் மற்றொரு ஷாக்!

தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் விக்கிரமராஜா பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் இன்னும் இரண்டு நாள்களில் அரசுத் துறை அதிகாரிகளுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உறுதிமொழி ஏற்க இருக்கிறாா்கள்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக புகாா் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பாரம் ஏற்றக் கூடாது என அறிவுறுத்த உள்ளோம். தமிழ்நாட்டில் 5 போ் மட்டுமே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மொத்த வியாபாரம் செய்கிறாா்கள். அவா்கள் குறித்து, மாவட்ட அரசுக்கு தகவல் தெரிவிக்க உள்ளேம். அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, விரைவில் ஆட்சிமன்ற கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம். எரிபொருள்களின் விலை குறையவில்லை என்றால், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தாா்

கொரோனா பரவல் காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அத்தியாவசிய பொருள்களைக்கூட வாங்க முடியாத சூழல் நிலவியது. தற்போது நிலைமை மாறத் தொடங்கி அனைத்து கடைகளும் திறக்கப்பட்ட நிலையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க மாநிலத் தலைவா் விக்கிரமராஜா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad