ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? Aadhar card address change in tamil..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 5, 2021

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? Aadhar card address change in tamil..!

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி? Aadhar card address change in tamil..!


ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் உங்களுடைய முகவரியை மாற்றம் செய்வதற்கு தேவைப்படுபவை.
உங்களுடைய ஆதார் கார்ட் நம்பர்.

உங்களுடைய ஆதார் கார்ட் ரெஜிஸ்ட்ர் செய்த மொபையில் நம்பர் தேவைப்படும். இந்த நம்பருக்கு ஒரு OTP நம்பர் அனுப்பப்படும், எனவே இந்த மொபையில் நம்பர் இல்லை என்றால் கண்டிப்பாக ஆன்லைன் மூலன் உங்களுடைய ஆதார் கார்டில் முகவரியை மாற்ற முடியாது.

எந்த முகவரிக்கு உங்களுடைய ஆதார்  கார்ட் முகவரியை மாற்றம் செய்ய உள்ளீர்களோ, அந்த முகவரிக்கு ஒரு அட்ரஸ் புரூப் அப்ளோட் செய்ய வேண்டும். அதாவது அந்த அட்ரஸ் புரூபை ஸ்கென் செய்து 2mb-க்கு குறைவாக உள்ளவாறு கம்ப்ரஸ் (Compress) செய்து வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் அப்ளோட் செய்த அட்ரஸ் புரூபிள் (Address Proof) உங்களுடைய பெயர் மற்றும் கையொப்பம் இட்டு ஸ்கென் செய்திருக்க வேண்டும்.


How to change address in aadhar card online in tamil step: 1
முதலில் உங்கள் சிஸ்டம் அல்லது மொபைலில் ப்ரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள். அவற்றில் UIDAI என்று டைப் செய்யுங்கள். இப்பொழுது uidai.gov.in என்ற இணையதளத்தின் வெப்சைட் முதலாவதாகக் காட்டப்படும், அவற்றை கிளிக் செயுங்கள்.

how to change address in aadhar card in tamilnadu online step: 2
Update Aadhaar என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றின் கீழ் Update your address online என்ற ஆப்சன் காட்டப்படும் அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு மற்றொரு page திறக்கப்படும் அவற்றில் உங்களுடைய ஆதார் கார்ட் நம்பரை டைப் செய்யுங்கள். பின்பு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.

பின்பு Send to OTP என்பதை கிளிக் செய்யுங்கள். அதன்பிறகு உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு OTP நம்பர் அனுப்பப்படும்.

அவற்றை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ஆதார் கார்ட் லாகின் செய்யப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad