முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 4, 2021

முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்!

முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம்!


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர். தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்பும் ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு.

நடைபயிற்சி, சைக்கிளிங் செல்லுதல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, சில மாதங்களாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்த ஸ்டாலின், இன்று மீண்டும் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சைக்கிள் பயிற்சி செய்த ஸ்டாலின், வழியில் பொதுமக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) ஸ்டாலின் உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad