'கமலுக்கு கரிசனை காட்டிய மோடி'... பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பில் சுவாரசியம்
தமிழகத்தில் நடந்த சட்டமன் ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. மொடக்குறிச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கோவை தெற்கு
ஆகிய நான்கு தொகுதிகளில் டாக்டர் சி. சரஸ்வதி, எம்.ஆர். காந்தி, நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகிய நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற பாஜக எம்எம்ஏக்கள் நான்கு பேரும் மாநில தலைவர் எல். முருகனின் தலைமையில் நேற்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி நான்கு எம்ஏக்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தனித்தனியே ஆலோசனை நடத்தினார். தொகுதியின் வளர்ச்சி பணிகள், சட்டசபை கூட்ட நுட்பங்கள் ஆகியவற்றை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்து, ஆலோசனையும் வழங்கியுள்ளார்.
குறிப்பாக நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர். காந்தி பாஜகவின் மூத்த தலைவர் என்பதால் அவரை பார்த்ததும் பிரதமர் மோடி அரவணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சுமார் 35 நிமிடம் நடந்த அந்த சந்திப்பில், புதிய எம்எல்ஏக்களுக்கு பிரதமர் மோடி நிறைய அனுபவங்களை பகிர்ந்ததோடு, சட்டசபையில் எவ்வாறு பேச வேண்டும்? மக்கள் நலத்திட்டங்களை எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment