போதைப் பழகத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; பதறவைக்கும் களநிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

போதைப் பழகத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; பதறவைக்கும் களநிலவரம்!

போதைப் பழகத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள்; பதறவைக்கும் களநிலவரம்!


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை உக்கடம் பகுதி அண்மைக்காலமாகவே போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில் வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரைகளை பொடியாக்கி, அதை காய்ச்சி வடிகட்டப்பட்ட நீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்கின்றனர். அவர்களில் சிறுவர்களும் இருப்பதாக தெரிகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகிறது.
இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பான்மையினரை காப்பாற்ற முடியாத நிலைமை விரைவில் உருவாகி விடும். 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. சென்னையில் இன்று காலை ரூ. 1 கோடி மதிப்புள்ள

கேட்டமைன் போதைப்பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது.இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை இன்னும் குறையவில்லை; அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. போதைப் பழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் உடல்நலம் சார்ந்த கோணத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. போதை உச்சத்திற்கு செல்வதால் இழைக்கப்படும் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.


No comments:

Post a Comment

Post Top Ad