அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு: முதல்வர் உத்தரவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு: முதல்வர் உத்தரவு

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு: முதல்வர் உத்தரவு


தமிழகத்தில் அரசு பேருந்துகளின் தரத்தை கணக்கிட்டு அவற்றின் ஆயுட்காலம் மேலும் நீடிக்கப்பட்டுளள்து.
அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது 19 ஆயிரத்து 500 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள் 12 லட்சம் கிலோ மீட்டரோ அல்லது 7 ஆண்டுகளோ ஓடியிருந்தால் அதன் பயன்பாட்டை நிறுத்திக்கொள்வது வழக்கமாக இருந்துவருகிறது.

இந்நிலையில் பேருந்துகளின் பயன்பாட்டுக்காலம் 9 ஆண்டு அல்லது 12 லட்சம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கான வரம்பு 3 ஆண்டுகள் என்பது 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது சாலை வசதிகள் மேம்பட்டுள்ளதுடன், பேருந்துகள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு தரமான உதிரி பாகங்கள் இருப்பதால் பயன்பாட்டுக்காலத்தை அதிகரிக்கும் முடிவு மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் எடுக்கப்பட்டுள்ளது'' என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad