தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல்: அன்புமணி கடும் கண்டனம்
''தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதும், வலைகளை அறுத்து சேதப்படுத்தி விரட்டியடித்திருப்பதும் கண்டிக்கத்தக்கவை. தாக்குதலால் மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையிலான சிங்கள அரசின் இத்தகைய அத்துமீறலை இந்தியா இனியும் அனுமதிக்கக்கூடாது.
No comments:
Post a Comment