கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை: சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 4, 2021

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை: சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை: சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன்


கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில், தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் சார்பில், பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று, தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியதாவது:

பத்திரிகைகளில் வரும் அரசு தொடர்பான செய்திகள் அனைத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எந்தத் துறையின் கீழ் செய்தி வருகிறதோ அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிடுகிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான், பத்திரிகையாளர்களுக்கு என, தனியே தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் என்று கூறினார். கொரோனா இரண்டாவது அலைக்கு செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் அப்படியே இருக்கும். மூன்றாவது அலை வரும்பட்சத்தில் நம்மால் சமாளிக்க முடியும்.

தடுப்பூசி வருகைக்கு ஏற்ப மக்களை வரவழைத்து தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தால் முன்னுரிமை கொடுத்து முகாம்களில் அவர்களை பரிசோதித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad