குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; சீக்கிரமே உங்க கைக்கு வரப் போகுது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; சீக்கிரமே உங்க கைக்கு வரப் போகுது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி; சீக்கிரமே உங்க கைக்கு வரப் போகுது!

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் குறைந்த விலையில் சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. சுமார் 2 கோடி குடும்பங்கள் நியாய விலைக்கடைகள் மூலம் பயன்பெற்று வருகின்றன. ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைக் கொண்டு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் பலன்களையும் பெற முடியும்.

அரசுக்கு பெரும் நஷ்டம்

அதாவது பேரிடர் கால உதவித் தொகை, பொங்கல் பரிசு, இலவச வேட்டி - சேலை போன்றவையும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தமிழக மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் குடும்ப அட்டை திட்டங்களால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆண்டிற்கு 25 ஆயிரம் கோடிக்கும் மேல் இழப்பு உண்டாகிறது. இருப்பினும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது என்ற வகையில் மேற்குறிப்பிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

15 நாட்களில் குடும்ப அட்டைகள்

இந்நிலையில் பொது வினியோக திட்டத்தின் பலன்களை பெறும் வகையில் நாள்தோறும் ஏராளமானோர் குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர். இதற்காக ஆன்லைனிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்படும் மனுக்கள் 60 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 15 நாட்களுக்குள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அதிரடி உத்தரவு

இதையொட்டி பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், நாள்தோறும் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிகின்றன. அதேசமயம் தினமும் 10 முதல் 12 ஆயிரம் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.தற்போது 3 லட்சம் பேர் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கு விரைவாக குடும்ப அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, விண்ணப்பித்த மனுக்கள் மீது ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad