பிரதமர் மோடியை சந்திக்கிறார் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

பிரதமர் மோடியை சந்திக்கிறார் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!


பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கிடைத்துள்ளதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர்
மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விரைவில் டெல்லிக்கு செல்லவிருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் அங்கு தங்கியிருக்க திட்டமிட்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கிடைத்துள்ளது. பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச உள்ளேன்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் 1972ல் அமெரிக்காவை உலுக்கிய வாட்டர்கேட் ஊழலை விட மிகப்பெரியது. அத்துடன், ஊடகங்கள் மீதான இன்றைய வருமான வரித்துறை சோதனையும் இணைந்துள்ளது. இது நாட்டில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' நிலையை உருவாக்கியுள்ளது.

டைனிக் பாஸ்கர் ஊடகத்தின் மீதும் ஊடக நிறுவனங்களின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒருபுறம் வருமான வரித்துறை சோதனை. மறுபுறம் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம். இது மிகவும் ஆபத்தானது.

ஒன்றிய அரசாங்கத்துக்கு அதன் அமைச்சர்கள் மீதே நம்பிக்கை இல்லை. ஊடகவியலாளர்கள் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. எனது தொலைபேசியையும் விட்டுவைக்கவில்லை. இன்று டைனிக் பாஸ்கர் பத்திரிகையை குறிவைத்துள்ளனர்.

அந்தப் பத்திரிகை, மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்தது, பெகாசஸ் பற்றி வெளிப்படையாக செய்திகளை வழங்கியது. அதனால் இன்று அந்த செய்தி நிறுவனம் குறிவைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் ஊடகங்களின் குரல் நெரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad