சினிமா ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்... சென்னையில் விரைவில் தியேட்டர்கள் திறப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 2, 2021

சினிமா ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்... சென்னையில் விரைவில் தியேட்டர்கள் திறப்பு?

சினிமா ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்... சென்னையில் விரைவில் தியேட்டர்கள் திறப்பு?

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இதனையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிப்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழு உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்றும், இன்றும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மேலும் பல்வேறு தள்ரவுகளுடன் ஊடரங்கை நீட்டிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் குறிப்பாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதால் வகை 3 இல் இடம்பெற்றுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆதிய நான்கு மாவட்டங்களில் ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு தியேட்டர்களை திறக்க அரசு விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே தியேட்டர்களை இயக்க அனுமதி அளிக்கப்படவுள்ளது என்றாலும், பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படவுள்ளதால் சென்னை மாநகர சினிமா ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad