கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 2, 2021

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு

இந்தியாவில் 71 மாவட்டங்களில் மட்டுமே, 10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகி வருவதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சம் என இருந்த நிலையில், மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், தினசரி பாதிப்பு 40 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, டெல்லியில், மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் கடந்த வாரத்தை விட 13 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது நாள்தோறும் சராசரியாக 46,000 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. தற்போது 71 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். உலகளவில் அதிக தடுப்பூசிகளை செலுத்திய நாடாக இந்தியா உள்ளது. இதுவரை 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் கூறியதாவது:
நாட்டின் 12 மாநிலங்களில் இருந்து இதுவரை 56 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திடம் கொரோனா தடுப்பூசி தொடர்பாக பேசி வருகிறோம்.



அந்த நிறுவனத்தின் தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad