உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் ராஜினாமா? காரணம் இது தான்!
உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரத் சிங் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் திரத் சிங் ராவத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது, அக்கட்சி எம்.எம்.ஏ.,க்கள் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதை அடுத்து, உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, திரத் சிங் ராவத் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, திரத் சிங் ராவத் ராஜினாமா செய்தார்.
முதலமைச்சர் திரத் சிங் ராவத், செப்டம்பர் 10-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும். இல்லை எனில், அவர் முதலமைச்சராக தொடர முடியாது.
இந்நிலையில், முதலமைச்சர் திரத் சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இது தொடர்பாக ராஜினாமா கடிதத்தை அளிக்க, மாநில ஆளுநர் பேபி ராணி மயுராவிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment