ஓலா, ஊபர் கார்களை அப்படியே விட்டு சென்ற ஓட்டுனர்கள்: ஸ்தம்பித்த அண்ணா சாலை
ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களிடம் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களையும் டாக்ஸி ஓனர்களையும் வஞ்சிப்பதாக கூறி போராட்டம் தமிழகத்தில் ஆங்காங்கே டாக்சி ஓட்டுனர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடைமுறையில் கிடைக்கும் வருமானம் அடிபடுவதாகவும், பயண மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் வலியுறுத்தி வந்தனர். அதே சமயம், பிடித்தம் செய்யப்படும் கட்டண தொகையை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், ஓட்டுனர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாதததால் சென்னையில் பல இடங்களில் ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் கார்களை சாலையில் நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் கார்களை அண்ணா சாலையில் நிறுத்தி விட்டு சாவிகளை எடுத்து சென்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment