கோரிக்கைகளின் எதிரொலி: அணுசக்தி துறை தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையம்
'' எனது கோரிக்கையை ஏற்று அணுசக்தி துறைக்கான தேர்வு மையத்தினை தமிழகத்தில் அமைத்த ஒன்றிய அரசிற்கு நன்றி'' என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ''
அணு எரிபொருள் வளாகம் ஜூன் 21ம் தேதியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தது.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை முடியாத போது கர்நாடகா தேர்வர்களை அலைய விடக்கூடாது என்று ஜூன் 29 அன்று அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவாவுக்கு கடிதம் எழுதி இருந்தேன். தேர்வு மைய தேர்வில் தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்படுவது குறித்த எனது கவலையையும் வெளியிட்டு இருந்தேன்.
No comments:
Post a Comment