சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டது ஏன்? சுவேந்து அதிகாரி விளக்கம்
சட்டப்பேரவையில், ஆளுநர் உரையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த தகவல்கள் இடம் பெறாததால், போராட்டத்தில் ஈடுபட்டதாக, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஆளுநர் ஜக்தீப் தன்கர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் ஜக்தீப் தன்கர் உரையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து எதுவும் இடம் பெறாததால் எதிர்க்கட்சியான பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில், பா.ஜ.க., சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. இதில் பா.ஜ.க., ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர். 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment