இலவசங்களும், சமூக நீதியும்; பிடிஆர் கொடுத்த மாஸான பதில்!
சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்திருந்தார். இதன் முழு விவரத்தை தனது இணையதளத்தில் அமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், இலவசங்கள் மற்றும் சமூகம் சார்ந்த முதலீடுகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பதில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, இலவசங்கள் என்ற சொல் தவறானது. ஏனெனில் இது ஏதோ மக்களுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையிலோ அல்லது அவர்களின் வாக்குகளை பெறவோ
இலவச திட்டம் அல்ல
அல்லது அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை மாற்றும் நோக்கில் செய்வது போன்ற விஷயங்களை குறிக்கிறது. அரசின் மதிய உணவு திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு இலவச திட்டம் அல்ல. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அவர்களை ஊக்குவிக்கும் வழிகள். எம்.ஜி.ஆர் ஆட்சியில்
மதிய உணவு திட்டம் விரிவடைந்து, கருணாநிதி ஆட்சியில் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மற்ற மாநிலங்களும் நாடுகளும் கூட இதைப் பின்பற்ற முயற்சிக்கின்றன. எனவே இது இலவசம் அல்ல. இலவசங்களை இரண்டு விதமாக புரிந்து கொள்ள வேண்டும். கணக்கியல் அடிப்படையில் இது வருவாய் செலவு. சமூகத்தின் அடிப்படையில் மனிதவள மேம்பாடு. குறிப்பாக இலவச மிதிவண்டிகள், இலவச மடிக்கணினிகள் உள்ளிட்டவை எதிர்காலத்திற்கான முதலீடு.
No comments:
Post a Comment