ரத்து செய்யப்படும் தளர்வுகள்? அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

ரத்து செய்யப்படும் தளர்வுகள்? அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை..!

ரத்து செய்யப்படும் தளர்வுகள்? அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை..!

கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியாத சூழலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுலா பயணிகள் கடைபிடிப்பதில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக பேசிய லவ் அகர்வால், நாட்டில் 90 மாவட்டங்களில் இருந்து மட்டுமே 80 சதவீத கொரோனா வழக்குகள் பதிவாகின்றன. இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது குறிக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இரு மாநிலங்களில் மட்டும் தலா 15 மாவட்டங்கள் அந்த பட்டியலில் உள்ளன. கேரளாவில் 14 மாவட்டங்களில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் குறையவில்லை.

மேலும், ஒடிசா, ஆந்திரா, அசாம், மணிப்பூர், கோவா, மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கிவிட்டனர்.
அத்துடன், சிம்லா, மணாலி மற்றும் முசோரி போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் இல்லாமல் சுற்றி வருவதான புகைப்படங்களை சுட்டிக்காட்டிய அமைச்சகம், வைரஸ் இன்னும் சோர்வடையவில்லை என்றும், இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை என்றும் எச்சரித்துள்ளது.



நாட்டில் 73 மாவட்டங்களில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், 65 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளதாவும் அமைச்சகம் தெரிவித்தது. மேலும், 5 சதவிகிதத்திற்கு மேல் தினசரி பாதிப்பு இருக்கும் எந்த மாவட்டமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியதை இணைச்செயலாளர் லவ் அகர்வால் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசியவர், மலை பிரதேசங்களில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காமலும், இரண்டாவது அலை ஓய்ந்துவிட்டதாக நினைத்து அதிகப்படியான பயணங்களை மக்கள் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், மலைப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை, இது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad