தமிழக அரசின் இலவச திட்டம்; அமைச்சர் சொன்ன மகிழ்ச்சியான செய்தி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

தமிழக அரசின் இலவச திட்டம்; அமைச்சர் சொன்ன மகிழ்ச்சியான செய்தி!

தமிழக அரசின் இலவச திட்டம்; அமைச்சர் சொன்ன மகிழ்ச்சியான செய்தி!


தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசு மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினசரி எத்தனை பெண்கள் பயணிக்கிறார்கள் என்பதைக் கணக்கிடும் வகையில் கடந்த 12ஆம் தேதி முதல் பிரத்யேகமாக பயணச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இலவச திட்டத்தின் கீழ் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகப்படியான பெண்கள் ஆர்வம்

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பல்வேறு முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது, தமிழகத்தில் கடந்த 12ஆம் தேதி முதல் தற்போது வரை அரசு மாநகரப் பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 5,741 திருநங்கைகள், 51,615 மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் 8,396 பேர் அடங்குவர்.

மீண்டும் தொடங்கிய பயணம்

இதுவரை பயணம் செய்தவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள். தினசரி 28 லட்சம் பெண்கள் பேருந்துகளில் செய்கிறார்கள். அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 68 சதவீதம் பெண்களே தினசரி பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மட்டுமின்றி கடந்த ஆட்சியில் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நிர்பயா திட்ட ஏற்பாடுகள்


அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி பகுதியில் நேற்று முதல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மக்களுக்கானது மட்டுமே. லாபத்திற்காக அல்ல. எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்காக பேருந்து டிக்கெட்களின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad