இனிமேதான் இந்த அண்ணாமலை ஆட்டத்த பாக்க போறீங்க... பாஜக இளம் தலைவர் திமுகவுக்கு எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

இனிமேதான் இந்த அண்ணாமலை ஆட்டத்த பாக்க போறீங்க... பாஜக இளம் தலைவர் திமுகவுக்கு எச்சரிக்கை!

இனிமேதான் இந்த அண்ணாமலை ஆட்டத்த பாக்க போறீங்க... பாஜக இளம் தலைவர் திமுகவுக்கு எச்சரிக்கை!


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் தமிழக பாஜகவின் புதிய தலைவர் அண்ணாமலைக்கு நேற்றிரவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தமிழகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக அமரும் காலம் வெகுதொலைவில் இல்லை. 2024 இல் நிறைய எம்.பி.,க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும். அதுவே நமது முதற்கட்ட பணியாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை கோடி பயனாளிகள் உள்ளனர். அவர்களை தேடி கண்டுபிடித்து நமது கட்சி கொள்கைகளை எடுத்துக்கூறி வாக்குகளாக மாற்ற வேண்டும்.

திமுகவை எதிர்த்து நிற்கின்ற ஒரே கட்சி பாஜகதான். கடந்த 69 நாட்களில் திமுகவை பலமுறை எதிர்த்துள்ளோம். டாஸ்மாக் திறந்ததிலிருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இது ஆரம்பம் தான்.

அடுத்த மூன்று வருடம் மக்களுக்காக வீதியில் தான் இருப்போம். போராட்டம் நடத்திக் கொண்டிருப்போம். திமுகவின் ஊழலை தட்டிக் கேட்போம்" என்று அண்ணாமலை திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad