திமுகவிற்கு இப்படியொரு ஷாக்; பற்றவைத்த திண்டுக்கல் சீனிவாசன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

திமுகவிற்கு இப்படியொரு ஷாக்; பற்றவைத்த திண்டுக்கல் சீனிவாசன்!

திமுகவிற்கு இப்படியொரு ஷாக்; பற்றவைத்த திண்டுக்கல் சீனிவாசன்!


தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் எஞ்சிய மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை அரசியல் கட்சிகள் படிப்படியாக தொடங்க ஆரம்பித்துள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் மூலம் தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வெறும் 8 நாளைக்கு தான்

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் தும்மலக்குண்டுவில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட கழக செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், திமுக அரசானது கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான் என்பது போல இருக்கிறது.

திமுகவின் பொய் வாக்குறுதிகள்

தேர்தலின் போது கூறிய நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதா மாதம் ரூ.1,000, மானிய விலையில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் ரூ.1,500ஆக உயர்வு, பேரூராட்சிகளில் 100 நாட்கள் வேலை திட்டம் என எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதேபோல் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளனர்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

அதிமுக அப்படியில்லை. சொன்னதைத் தான் செய்தது. நமது கழகம் வெற்றி பெற்றிருந்தால் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் நிறைவேற்றி இருப்பர். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே மின்வெட்டு அதிகரித்துவிட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad