டோல்கேட் கட்டணம் குறையுமா? டெல்லிக்கு எடுத்து சொல்லும் எ.வ.வேலு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

டோல்கேட் கட்டணம் குறையுமா? டெல்லிக்கு எடுத்து சொல்லும் எ.வ.வேலு

டோல்கேட் கட்டணம் குறையுமா? டெல்லிக்கு எடுத்து சொல்லும் எ.வ.வேலு


பெட்ரோல், டீசல் விலை வரைமுறையின்றி உயர்ந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அனைத்துப் பொருள்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. இதைக் குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையோடு சுங்கச் சாவடி கட்டணமும் சேர்ந்து கொள்வதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் சுங்கச் சாவடி கட்டணத்தை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேரள மாநிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே, சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்படும். ஒப்பந்த காலம் முடிவுற்ற சுங்கச் சாவடிகள் குறித்து மாநில அரசுக்கு தெரியாது. திண்டிவனம்-பரணூர் சுங்கச் சாவடி தொடர்பாக எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் அவை குறித்து ஆராய்ந்து ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.


No comments:

Post a Comment

Post Top Ad