திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தொகுதிக்குள் சென்று அதிரடி ஆய்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தொகுதிக்குள் சென்று அதிரடி ஆய்வு!

திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தொகுதிக்குள் சென்று அதிரடி ஆய்வு!


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அர்ஜுனன். இவர் இன்று ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.


அதாவது ஒலக்கூர், சாரம் கீழ் ஆதனூர், மங்களம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

இதில் முன்னாள் சேர்மன் ஒலக்கூர் பன்னீர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்பி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குட்டி என்கின்ற யோகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad