தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்; அமைச்சர் அறிவிப்பால் செம ஹேப்பி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்; அமைச்சர் அறிவிப்பால் செம ஹேப்பி!

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்; அமைச்சர் அறிவிப்பால் செம ஹேப்பி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 1,859 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,145 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் பலியாகி இருக்கின்றனர். தற்போது 21,207 பேர் மட்டும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி புதிய பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பு பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

பள்ளிகள் திறப்பை பொறுத்தவரை உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கல்வி சேனல், ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அலுவலகப் பணிகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்காக

ஆசிரியர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

ஆசிரியர்கள் வருகை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வருகை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சூழலுக்கு ஏற்ப 100 சதவீதம் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எப்போது செய்தியாளர்களை சந்தித்தாலும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பிரதானமாக இருந்து வருகிறது.

அரசுப் பள்ளிகள் தரம் உயர்வு

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் கள்ளபெரம்பூரில் உள்ள செங்கழு நீர் ஏரியை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றார். காலிப் பணியிடங்கள் நிரப்புவது பற்றிய கேள்விக்கு, பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நிரவல் செய்யப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad