பிடிஆர் போடும் பட்ஜெட்: ஸ்டாலின் அடிக்கும் மூன்று சிக்சர்: வெளியாகும் செம அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

பிடிஆர் போடும் பட்ஜெட்: ஸ்டாலின் அடிக்கும் மூன்று சிக்சர்: வெளியாகும் செம அறிவிப்பு!

பிடிஆர் போடும் பட்ஜெட்: ஸ்டாலின் அடிக்கும் மூன்று சிக்சர்: வெளியாகும் செம அறிவிப்பு!

தேர்தல் சமயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை பெரும் கவனம் பெற்றது. தொலைநோக்கு திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள், கவர்ச்சிகர திட்டங்கள் என கலந்து இருந்தன. இவையெல்லாம் நிறைவேற்ற முடியுமா என பிற கட்சிகள் அப்போதே விமர்சனம் செய்தன. அதேசமயம் திமுக கொடுத்த வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையிலும் சில கட்சிகள் சேர்த்துக் கொண்டன.
தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது தமிழ்நாட்டில் கொரோனா பொது முடக்கம் உச்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. இதனால் கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய், பால் விலை குறைப்பு, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது போன்ற சில வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கொரோனா தடுப்பு பணிகளில் கவனம் செலுத்தியது.தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையும் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக இருப்பதாக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதனால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி உடனடியாக நிறைவேற்ற முடியாது, கால தாமதமாகும் என கூறினார்.

நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூ, கல்விக் கடன், நகைக்கடன் தள்ளுபடி என பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என திமுக அரசுக்கு எதிராக அதிமுக தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியது.

இந்த சூழலில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 13ஆம் தேதி கூட்டத் தொடர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் தமிழக அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன.

ஆட்சிக்கு வந்து 75 நாள்கள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட முடியாது என்றாலும் எதிர்கட்சிகள் கிளப்பியுள்ள விமர்சனங்களை சரிகட்ட முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், ஐந்து சவரனுக்கு குறைவான நகைக்கடன் தள்ளுபடி ஆகிய மூன்று அறிவிப்புகள் செய்ல் வடிவம் பெறும் என்கிறார்கள்.

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட பகுதிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad