அரசியலுக்கு பிரேக் போட்ட அதிமுக மாஜி அமைச்சர்: என்ன காரணம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

அரசியலுக்கு பிரேக் போட்ட அதிமுக மாஜி அமைச்சர்: என்ன காரணம்?

அரசியலுக்கு பிரேக் போட்ட அதிமுக மாஜி அமைச்சர்: என்ன காரணம்?

திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் மீதான வழக்குகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து சிக்கப் போகும் அமைச்சர் யார் என்ற கேள்வி கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசியலிலிருந்து ஒதுங்கி தொழிலில் கவனம் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

மாஃபா என்ற பெயரில் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டியராஜன் அமைச்சர் பதவியேற்ற பின் தொழிலில் அவர் வகித்த பொறுப்புகள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது ஆவடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிலை கவனிக்கச் சென்றுவிட்டார்.

மாஃபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக, நேற்று பாண்டியராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். “மாஃபா மனிதவள நிறுவனம், ஒரு காலத்தில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால், நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல், தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டேன். தற்போது, தொழிலை கவனிக்க முடிவு செய்து, பொறுப்பேற்றுள்ளேன்.

அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன். சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக, அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில், அதிமுகவில் பொறுப்புகளை தொடர்கிறேன்” என்று பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.


மாஃபா பாண்டியராஜன் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலராக பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad