கோவையில் தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி ஒளிந்துகொண்ட வாலிபர்கள்
கொரோனா பரவல் இரண்டாவது அலையால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேலாக சென்ற தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 5 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. முழு ஊரடங்கு, தடுப்பூசி மற்றும் வைரஸ் தீவிரம் காட்டுக்குள் வந்ததன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டில் அடுத்த 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும், மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் போட்டுக்கொள்வது மிக முக்கியம் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் சிலர் இன்னும் அச்சத்திலிருந்து விடுபடவில்லை. குறிப்பாக கிராம புறங்களில் உள்ளவர்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இன்னும் போய் சேரவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 100% தடுப்பூசி செலுத்துவதை மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மலை வாழ் மக்கள் வசிக்கும் இடங்கள், குக்கிராமங்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி முகாம்களை அமைத்து வருகின்றனர்.
அந்தவகையில், கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சுகாதார துறை ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது அவர்களை பார்த்து பயந்து பழங்குடி மக்கள் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்ட சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை எவ்வளவோ சமரசபடுத்தியும் கீழே இறங்கி வராத நிலையில் 10 பேருக்கு மட்டும் சுகாதார துறை ஊழியர்கள் தடுப்பூசி போட்டுவிட்டு திரும்பினர்.
No comments:
Post a Comment