தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும்: அன்புமணி வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும்: அன்புமணி வாழ்த்து!

தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும்: அன்புமணி வாழ்த்து!

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகின்றன. டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக, ஒலிம்பிக் தொடர் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மொத்தமுள்ள 33 போட்டிகளில் 339 தங்கப் பதக்கங்களுக்காக 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் 18 போட்டிகளில் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கொரோனா காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு பாமக இளைஞரணி செயலாளர்

அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 56 வீராங்கனைகள் உள்ளிட்ட 127 வீரர்களும் சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் இந்திய அணியினர் பங்கேற்கின்றனர். பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டிலிருந்து இம்முறை 12 வீரர்கள், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தொடர் ஓட்டம், கத்திச்சண்டை, டேபிள் டென்னிஸ், படகுப்போட்டி, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழ்நாடு தங்க வேட்டை நிகழ்த்தட்டும்” என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.No comments:

Post a Comment

Post Top Ad