ஓபிஎஸ், இபிஎஸ்ஸை கவர் பண்ணிய அண்ணாமலை: காரணம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

ஓபிஎஸ், இபிஎஸ்ஸை கவர் பண்ணிய அண்ணாமலை: காரணம் என்ன?

ஓபிஎஸ், இபிஎஸ்ஸை கவர் பண்ணிய அண்ணாமலை: காரணம் என்ன?

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அண்ணாமலை சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியை அண்ணாமலை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார்.
இதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
சந்திப்பின் போது அண்ணாமலை பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். சந்திப்பின் போது பாஜ பொது செயலாளர் கருநாகராஜன், எம்.என்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இருவரிடமும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் வர உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கூட்டணிக் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்பட்டாலும் இதற்கு பின்னர் வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.



“தேர்தலுக்கு முன்பு, கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதே இனி தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என அதிமுகவை திணறடித்தது பாஜக. அதேபோல் முதல்வர் வேட்பாளரை பாஜக டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என குட்டையை குழப்பினர். அதன்பின்னர் வழக்கம்போல் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு 4 எம்.எல்.ஏக்களைப் பெற்றது.

அதேபோல் தற்போதும் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என தமிழக பாஜக கூறிவருகிறது. இதனால் தமிழக அரசியலில் அதிமுக பொருட்டில்லை என்ற பிம்பம் உருவாகிறது. இதை அதிமுக தலைமை ரசிக்கவில்லை. அதேபோல் கொங்கு நாடு கோரிக்கையும் தங்கள் கட்சியை பதம் பார்த்துவிடும் என அதிமுக நினைக்கிறது. இவ்வாறு அதிகமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வரும் பாஜக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக தயவு இல்லாமல் சந்திக்க முடியாது என்பதையும் உணர்ந்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ளைக் கொடி காட்டுவது போல் அண்ணாமலை பொன்னாடை போர்த்திவிட்டு வந்திருக்கிறார்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad