காசுபணம் வைக்க மாட்டீர்களா அமைச்சர் துரைமுருகன்? பண்ணை வீட்டில் கைவரிசை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

காசுபணம் வைக்க மாட்டீர்களா அமைச்சர் துரைமுருகன்? பண்ணை வீட்டில் கைவரிசை!

காசுபணம் வைக்க மாட்டீர்களா அமைச்சர் துரைமுருகன்? பண்ணை வீட்டில் கைவரிசை!

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மாஞ்சக்கொள்ளை புதூர் பகுதியில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு பண்ணை வீடு உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நுழைந்த கொள்ளையர்கள், அங்கு பணம், நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றனர்.
இதையடுத்து, வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவர் பண்ணை வீட்டுக்கு அன்றைய தினமே சென்ற கொள்ளையர்கள் அங்கும் எதுவும் சிக்காததால், காசுபணம் வைக்கக்கூடாதா? வீட்டில் ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டீங்களா? என்று சுவற்றில் எழுதி வைத்து விட்டு சென்றானர். அங்கும் சிசிடிவி ஹார்டிஸ்க்கை மட்டும் அவர்கள் திருடிச் சென்றனர்.

இது குறித்து ஏலகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். அத்துடன், மேற்படி பங்களாக்களுக்கு ஆய்வாளர் அளவிளான பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையே, வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் வசீம் அக்ரம், முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்த அதாவூர் ரஹ்மான் ஆகியோரது வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற

கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த நவீத் (28) என்ற இளைஞரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்த அவரை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்ததில், வாணியம்பாடியில் 2 வீடுகளில் தங்க நகைகளையும், அமைச்சர் துரைமுருகன் மற்றும் பள்ளி தாளாளர் செந்தில் குமார் ஆகியோர் பண்ணை வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், முஸ்லிம்பூர் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுசுவர் இருந்ததால் மேல் மாடியில் சென்று வீட்டிற்குள் நுழைய கம்பியின் வளைத்து ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad