நேர்மை தவறாத டீ மாஸ்டர்; சமூக ஆர்வலர்கள் பாராட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

நேர்மை தவறாத டீ மாஸ்டர்; சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

நேர்மை தவறாத டீ மாஸ்டர்; சமூக ஆர்வலர்கள் பாராட்டு!

விழுப்புரம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் வேலை செய்து வருபவர் டீ மாஸ்டர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் உள்ள கீழ் வன்னியர் தெருவில் வசித்து வருகிறார்.

நேற்று 11 மணி அளவில் தான் பணிபுரியும் டீக்கடை அருகே 10 சவரன் தங்க நகை அடங்கிய காகித பொட்டலம் ஒன்று கீழே கிடைத்துள்ளது. இதை எடுத்த விஜயகுமார் உடனே பழைய பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரிடம் ஒப்படைத்தார்.

இதனை அடுத்து சில மணி நேரங்களில் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் நகை தவற விட்டதாக புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வசிக்கும் வானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுந்தரிதேவி புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் சுந்தரிதேவி குடும்பத்தோடு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்லும்போது பழைய பேருந்து நிலையத்தில் பழங்கள் வாங்கிய நிலையில் தனது ஹேண்ட் பேக்கில் இருந்து நகையை தவறவிட்டது தெரிய வந்துள்ளது



பின்னர் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் டீ மாஸ்டர் விஜயகுமார் முன்னிலையில் சுந்தரிதேவியிடம் தங்க நகைகள் அனைத்தும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

பறிபோன நகைகளை கண்டவுடன் சுந்தரிதேவி விஜயகுமாருக்கு கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துள்ளார். மேலும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாருக்கு சால்வை அணிவித்து அவரது நேர்மையான செயலினை கௌரவித்தார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினை அறிந்த பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்த ஆர்வலர்கள் விஜயகுமார் வேலை செய்யும் டீக்கடையில் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி, வறுமையிலும் தனது நேர்மையை கைவிடாத விஜயகுமாரின் செயலை பாராட்டினர்.



நேர்மையான டீ மாஸ்டரின் இந்த செயல் சமூக வலைதளத்திலும், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad