நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை..!

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை..!

நடிகர் விஜய் கடந்த 2012இல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ஆடம்பரமான ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஜூலை 13ம் தேதி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விசாரணைக்கு வந்தது.
அப்போது சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது என்று நீதிபதி சாடினார். மேலும், நடிகர்கள் ரியல் ஹுரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்தார். வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு எனக்கூறி நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்தும், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை நீக்கக்கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு ஜூலை 19ம் தேதி நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு நாளை இரு நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad