மாநில எல்லையில் தொடரும் பதற்றம் - 6 போலீசார் உயிரிழப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

மாநில எல்லையில் தொடரும் பதற்றம் - 6 போலீசார் உயிரிழப்பு!

மாநில எல்லையில் தொடரும் பதற்றம் - 6 போலீசார் உயிரிழப்பு!

அசாம் - மிசோரம் மாநில எல்லையில், இரு மாநில போலீசாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் பலியாகி உள்ளனர்.


வட கிழக்கு மாநிலங்களான அசாம் - மிசோரம் மாநில எல்லையான, மிசோரம் மாநிலத்தின் கோசிப் என்ற இடத்தில் உள்ள சோதனைச்சாவடியை அசாம் மாநில போலீசார் அதிவேகமாக கடந்ததாகவும், மிசோரம் மாநில காவல் துறையின் வாகனத்தை இடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மிசோரம் மாநில போலீசார் மீது, அசாம் மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இரு மாநில எல்லைகளில் பதற்றம் நிலவியது. இரண்டு மாநில போலீசாரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் குறித்து, அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்கா ஆகியோரிடமும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும்படி முதலமைச்சர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். இந்நிலையில், அசாம் - மிசோரம் போலீசாருக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீசார் உயிரிழந்ததாக, அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



முன்னதாக, இரண்டு மாநில முதலமைச்சர்களும் ஒருவரையொருவர் ட்விட்டரில் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad