இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி!

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி!

இந்தோனேஷிய நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.


தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவின் லுவுக் என்ற இடத்தில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 6.2 ஆக பதிவாகியது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகள், அலுவலங்கள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் அலறி அடித்து ஓடினர்.



இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிர் சேதம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad