1,000-ஆக உயர்கிறது எம்.பி.,க்களின் எண்ணிக்கை? - ஒன்றிய அரசு திட்டம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

1,000-ஆக உயர்கிறது எம்.பி.,க்களின் எண்ணிக்கை? - ஒன்றிய அரசு திட்டம்?

1,000-ஆக உயர்கிறது எம்.பி.,க்களின் எண்ணிக்கை? - ஒன்றிய அரசு திட்டம்?

நாடாளுமன்ற மக்களவையில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை, 543ல் இருந்து 1,000 ஆக உயர்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் இரண்டு நியமன உறுப்பினர்களையும் சேர்த்து, 545 ஆக இருக்கும் நிலையில், அந்த எண்ணிக்கையை, ஆயிரமாக உயர்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் மக்கள் தொகை 55 கோடியாக இருந்த போது 545 எம்.பி.,க்கள் இருந்ததாகவும், தற்போது மக்கள் தொகை 100 கோடியை தாண்டியுள்ள நிலையில், அதற்கு ஏற்றவாறு எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே, புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டடம், ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்தத் தலைவரும், எம்.பி.,யுமான மணிஷ் திவாரி தெரிவித்ததாவது:
நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக இதை செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தினால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad