அ.தி.மு.க., கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது! - ஜெயகுமார் கறார் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

அ.தி.மு.க., கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது! - ஜெயகுமார் கறார்

அ.தி.மு.க., கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது! - ஜெயகுமார் கறார்


அ.தி.மு.க., கொடி கட்டிய காரில், சசிகலா செல்வதை ஏற்க முடியாது என, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அ.தி.மு.க., கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
அ.தி.மு.க., கொடி கட்டிய காரில் சசிகலா செல்வதை ஏற்க முடியாது. அ.தி.மு.க.,வோடு
எந்த உரிமையும் இல்லாத அவர், கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனனை சந்திக்க சென்றதை விமர்சிக்க விரும்பவில்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகி பெருந்தன்மையோடு அ.தி.மு.க., இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக் கொடுத்தாரோ, அதே போன்று, சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுக்க வேண்டும்; மாறாக தடையாக இருக்கக் கூடாது.

உதயநிதி ஸ்டாலின் படத்தை சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும். சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும் அதை நாங்கள் எதிர்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad