சேலம் ரயிலை கவிழ்க்க சதி: பைலட் தண்டவாளத்தை பார்த்ததால் நூல் இலையில் தப்பிப்பு!
கரூரிலிருந்து இன்று காலை புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சேலம் ஜங்ஷன் திருவாக்கவுண்டனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கட்டிடங்களில் காங்கிரீட் மேல் தளம் அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு பலகை ஒன்று கிடந்தது.
இதனைப் பார்த்த இன்ஜின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு குட்ஸ் வண்டியை நிறுத்தினார். தொடர்ந்து குட்ஸ் வண்டி ஒட்டுநர் விபத்து குறித்து சேலம் ரயில் நிலைய மேலாளர் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பலகையை அகற்றினர். இதையடுத்து பெரும் விபத்திலிருந்து தப்பிய குட்ஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
தொடர்ந்து இரும்பு பலகையைத் தண்டவாளத்தில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவாக்கவண்டனூர் பகுதியில் விசாரித்தபோது திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை செய்தனர்.
No comments:
Post a Comment