ஆரம்பிக்கலாமா!: விக்ரம் திரைப்படத்தின் டெஸ்ட் ஷுட்டை முடித்த கமல்ஹாசன்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

ஆரம்பிக்கலாமா!: விக்ரம் திரைப்படத்தின் டெஸ்ட் ஷுட்டை முடித்த கமல்ஹாசன்...

ஆரம்பிக்கலாமா!: விக்ரம் திரைப்படத்தின் டெஸ்ட் ஷுட்டை முடித்த கமல்ஹாசன்...


விஜய்யின் மாஸ்டர் படத்தை முடித்த கையோடு கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனிடையில் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால், விக்ரம் படம் வெயிட்டிங்கில் இருந்தது. அதனை தொடர்ந்து தேர்தல் முடித்த கையோடு விக்ரம் படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் ஷுட் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பைத் துவங்க, விக்ரம் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு படத்தில் பணியாற்ற உள்ள மற்ற டெக்னீஷியர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

விக்ரம் திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே பகத்பாசில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் கைதி திரைப்படத்தில் மற்ற பிரபலங்களையும் இந்த படத்தில் இணைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ் மற்றும் நரேன் உள்ளிட்டோர் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad