பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி; இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி; இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதி; இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


குஜராத் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. நேற்றைய தினம் புதிதாக 56 பேருக்கு மட்டும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 196 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும் பலியாகி இருக்கிறார். தற்போது 1,356 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்று பெரிதும் குறைந்திருப்பதை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட தளர்வுகள் தொடர்பாக முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 10 நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதில் பூஜ், மோர்பி, பதான், மெக்சானா, பரூச், நவ்சாரி, வல்சாத், அங்லேஷ்வர், வாபி, காந்திதம் ஆகியவை அடங்கும். அதேசமயம் ஜூலை 10 முதல் 20ஆம் தேதி வரை அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, பவ்நகர், ஜாம்நகர், ஜூனாகத், காந்தி நகர் ஆகிய 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவுநேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்.
இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் எட்டு நகரங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை இரவு 9 மணி வரை திறந்திருக்கலாம். உணவகங்களும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்சல் சேவையை பொறுத்தவரை நள்ளிரவு வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.


No comments:

Post a Comment

Post Top Ad