என்னது ரெட் அலர்ட்டா? இங்கெல்லாம் பொளந்து கட்டப் போகும் பெருமழை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

என்னது ரெட் அலர்ட்டா? இங்கெல்லாம் பொளந்து கட்டப் போகும் பெருமழை!

என்னது ரெட் அலர்ட்டா? இங்கெல்லாம் பொளந்து கட்டப் போகும் பெருமழை!


கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (ஜூலை 11) கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது. எனவே இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது 24 மணி நேரத்திற்குள் 20 செ.மீ அளவிற்கு அதி தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை மையம் எச்சரிக்கை

மேலும் வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்டும், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டிருக்கிறது. ஆரஞ்ச் அலர்ட் மூலம் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவே மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை என்றால் 6 செ.மீ முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி கோட்டயத்தில் 15 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. திருவனந்தபுரத்தில் 1.7 செ.மீ, எர்ணாகுளத்தில் 10.7 செ.மீ அளவும் மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad