பொளந்து கட்டிய கனமழை; ஒகேனக்கல்லில் மிரள வைக்கும் காவிரி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

பொளந்து கட்டிய கனமழை; ஒகேனக்கல்லில் மிரள வைக்கும் காவிரி!

பொளந்து கட்டிய கனமழை; ஒகேனக்கல்லில் மிரள வைக்கும் காவிரி!

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக குடகு, சிவமொக்கா, ஹாசன் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைக்கு நீர்வரத்து பெரிதும் அதிகரித்துள்ளது.

கரைபுரண்டு ஓடும் காவிரி

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி மேற்குறிப்பிட்ட அணைகளில் இருந்து 36 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் நோக்கி வேகமாக பாய்ந்து வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்து அங்குள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. தற்போது காவிரி ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

தமிழகத்திற்கு வரும் காவிரியில் நீர் பெருக்கெடுத்துள்ளதை அறிந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு எல்லைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒகேனக்கல் அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் கண்காணிப்பும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க பென்னாகரம் பிரிவு சாலை,

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

மடம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அதேசமயம் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34 ஆயிரத்து 144 கன அடியாகவும்,நீர் வெளியேற்றம் 12 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் 74.34 அடியாக காணப்படுகிறது. நீர் இருப்பு 37.47 டி.எம்.சியாக இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad