'ஹெலோ ஆஃப் த டிவி'... ஈபிஎஸ் - ஓபிஎஸ் அறையில் ஸ்டாலின் என்ட்ரி... டெல்லி சுவாரசியம்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ. பன்னீர்செல்வம் மாநில பெரிய பொறுப்புகளை எடப்பாடியிடம் கொடுத்துவிட்டு, டெல்லி பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக மகனுக்கு மத்தியில் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று ஆர்வமாக இருந்த நிலையில் கூட்டணி கட்சியான அதிமுகவை பாஜக கழட்டி விட்டிருப்பது ஓபிஎஸ்க்கு மகிழ்ச்சியை தரவில்லை.
இதற்கு மத்தியில் சசிகலா தொடர்ச்சியாக ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வர, அதற்கு அதிமுக மாவட்டம் வாரியாக அவருக்கு எதிராக தீர்மானம் எடுத்து வந்தது. ஆனாலும், பின்வாங்க விரும்பாத சசிகலா, அதிமுகவில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் ஆடியோ பிளானை அடுத்து சசிகலாவின் அடுத்தகட்ட வியூகம் என்ன என்பதை பிஎஸ் பிரதர்ஸ்களை கடுமையாக யோசிக்க வைத்துள்ளது. இதற்கு மத்தியில், பிரதமர் மோடியை சந்திக்க நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லி புறப்பட்டார். அவருடன் மனோஜ் பாண்டியன் சென்றார். அவரை தொடர்ந்து, நேற்றிரவு எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம் ஆகியோருடன் டெல்லிக்கு விரைந்தார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்று கூட்டாக அனைவரும் சந்தித்து பேசினர். முன்னதாக இந்த சந்திப்பில், அவை தலைவர் பதவி, சசிகலா செயல்பாடுகள், ஒன்றிய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாதது ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால், சந்திப்பிற்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ், '' ''மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமரிடம் வலியுறுத்தினோம். தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை சேதப்படுத்திவருகிறார்கள் அதை தடுத்த நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்தோம்'' என கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment