'1500 கோடி ரூபாய் ஊழல்'... 12 சதவீத கமிஷன், முன்னாள் அமைச்சர் வேலுமணி சிக்குவாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

'1500 கோடி ரூபாய் ஊழல்'... 12 சதவீத கமிஷன், முன்னாள் அமைச்சர் வேலுமணி சிக்குவாரா?

'1500 கோடி ரூபாய் ஊழல்'... 12 சதவீத கமிஷன், முன்னாள் அமைச்சர் வேலுமணி சிக்குவாரா?

அதிமுகவின் முன்னாள் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் மீதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் ஊழல் குற்றசாட்டை ஆதாரத்துடன் தற்போதைய முதல்வர்
முக ஸ்டாலின் கடந்தாண்டில் ஆளுநரிடம் வழங்கினார்.
மேலும், திமுக ஆட்சி அமைந்ததும், எஸ்.பி.வேலுமணி அரசியல் விட்டு சென்றாலும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் பொறுமை காத்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து கோவை மாநகராட்சி திட்டங்களிலும் 12 சதவீதம் கமிசனாக பெற்று கோடி கணக்கில் எஸ்.பி. வேலுமணி ஊழல் செய்துள்ளதாக திரைப்பட தயாரிப்பாளர் ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், '' கடந்த அதிமுக ஆட்சியின்போது பல்வேறு டெண்டர் முறைகேடுகள் மற்றும் லஞ்சம், கமிசன் மூலம் பொதுமக்களின் கோடிக்கணக்கில் வரிப்பணத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் ஒரு சில எம்எல்ஏக்கள் மோசடி செய்து விட்டனர். ''அத்திகடவு - அவிநாசி திட்டம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், நொய்யல் புனரமைப்பு திட்டம், பாதாள சாக்கடை திட்டம், உக்கடம் மேம்பால பணிகள், பந்தயசாலை ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டம், சூயஸ் குடிநீர் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம் பணிகள், சாலை மற்றும் சாக்கடை பணிகள் ஆகியவற்றில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது.

அனைத்து கோவை மாநகராட்சி பணிகளிலும் 12 சதவீதம் கமிசனாக பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது சடடப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரேஸ்கோர்ஸ் ரகுநாதன், கோவையின் அனைத்து திட்டங்களிலும் கமிஷன் பெற்று 1500 கோடி ரூபாய்க்கும் மேல் எஸ்.பி. வேலுமணி கொள்ளையடித்துள்ளதாக அவர் கூறினார். புகார் கொடுத்துள்ள தயாரிப்பாளர் ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad