இதை மட்டும் செஞ்சு பாருங்க; தமிழக முதல்வர் கொடுத்த சூப்பர் ஐடியா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

இதை மட்டும் செஞ்சு பாருங்க; தமிழக முதல்வர் கொடுத்த சூப்பர் ஐடியா!

இதை மட்டும் செஞ்சு பாருங்க; தமிழக முதல்வர் கொடுத்த சூப்பர் ஐடியா!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாழ்வாதாரமும், நிதி ஒதுக்கீடும்

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு நலன் அளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சி சிறக்கவும், முறையான திட்டங்களை வகுத்து, அவற்றின் செயல்பாட்டினைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அரசின் நிதி ஒதுக்கீடுகள் அதிகபட்ச மக்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பிரத்யேக நிகழ்தரவு

திட்டங்களை வகுக்கையில் பல்வேறு துறை வல்லுநர்களையும், செயற்பாட்டாளர்களையும் கலந்தாலோசித்து அவர்கள் கருத்துகளைப் பெற்றுத் திட்டங்களை இறுதி செய்ய வேண்டும். இது சிறப்பான பயன்களை அளிக்கும் என்று தெரிவித்தார். மாநிலத்திற்கான பிரத்யேகமாக நிகழ்தரவு (Real Time Data) ஒன்றினை நிறுவுமாறும்,

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்

மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்குத் திட்டங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் ஏற்படும் நிகழ் மாற்றங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். முன்னதாக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முக்கிய திட்டங்களான,

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் மேற்கொள்ளப்படும் வேளாண், பொருளாதாரக் கணக்கெடுப்புகள் குறித்தும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், பயிர் அறுவடைகளின் சராசரிக் கணக்கெடுப்புப் பற்றிய புள்ளிவிவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad