மக்கள் நீதிமன்றத்தில் இந்த நீதி உங்களுக்கு வழங்கப்படும்: தேனிக்கு நீதி!
தேனி மாவட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் முகமது ஜியாவுதீன் இன்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
சட்டப்பணிகள் ஆணைக்குழுச் சட்டம் 2002 திருத்தச் சட்டத்தின் படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் மாவட்ட நீதிபதியைத் தலைவராகக் கொண்டு செயல்படும்.
பொதுச் சேவைப் பணிகளில் அனுபவம் பெற்ற 2 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். விமானம், சாலை, நீர்வழிப் பயணிகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து சேவைகள். அஞ்சல், தந்தி, தொலைப்பேசி சேவை. எந்தவொரு நிறுவனத்தினாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் அல்லது நீர் வழங்கும் சேவை. பொது பாதுகாப்பு அல்லது சுகாதார அமைப்பு.
மருத்துவமனை மற்றும் மருந்தகத்தின் சேவை. காப்பீட்டுச் சேவைகள். கல்வி நிறுவனங்கள், வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவை என 7 பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் தொடர்பான புகார்கள் இந்த நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும்.
No comments:
Post a Comment