ஜிகா வைரஸால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கும் - அமைச்சர் மா.சு கொடுத்த ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 20, 2021

ஜிகா வைரஸால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கும் - அமைச்சர் மா.சு கொடுத்த ஷாக்!

ஜிகா வைரஸால் சிறிய தலையுடன் குழந்தைகள் பிறக்கும் - அமைச்சர் மா.சு கொடுத்த ஷாக்


ஜிகா வைரஸ் பாதிப்பால், சிறிய தலைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைத் தொடர்ந்து கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள - தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும், கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எய்டஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை. இதுவரை 2,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர் நலம் பெற்று வர வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad