குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது? - மத்திய அமைச்சர் சொன்ன தகவல்!


இந்தியாவில், 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாரத் பயோ டெக் நிறுவனத்தின், கோவாக்சின் தடுப்பூசியும், பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து, சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், பொது மக்களுக்கு தற்போது போடப்பட்டு வருகின்றன. ஒருசில தனியார் மருத்துவமனைகளில், ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில், கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 44 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பாரத் பயோ டெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீது பரிசோதனை செய்து வருகிறது. இந்நிறுவனம் இரண்டு கட்ட பரிசோதனைகளை நடத்தி முடித்துள்ளதாகத் தெரிகிறது. இதே போல், ஜைடஸ் காடில்லா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனமும், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று, டெல்லியில் பா.ஜ.க., எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் சில நாட்களில் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அடுத்த மாதம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.செப்டம்பர் மாத தொடக்கத்தில், நாட்டில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வாய்ப்புள்ளதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad